உலக செய்திகள்

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடியிடம் நல்ல திட்டங்கள் உள்ளன; புதின்

உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது.

மாஸ்கோ,

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடியிடம் நல்ல திட்டங்கள் உள்ளன என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கூறினார்.

உக்ரைன் - ரஷியா போர்

உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன.

அதேவேளை, போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா, சீனா போன்ற நாடுகளும் முயற்சித்து வருகின்றன. குறிப்பாக, போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக இந்தியா பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.

பிரதமர் மோடியிடம் நல்ல திட்டங்கள் - புதின்

இந்நிலையில், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடியிடம் நல்ல திட்டங்கள் உள்ளன என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கூறினார். இது தொடர்பாக புதின் கூறுகையில்,

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக பிரதமர் மோடி என்னிடம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார். இரு நாட்டு அளவிலும், தனிப்பட்ட முறையிலும் மோடியுடன் நட்புறவு நிலவி வரும்போதும் அவர் என்னிடம் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து அறிவுறுத்தி வருகிறார். போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக இரு தரப்புக்கும் பலன் அளிக்கும் வகையிலான நல்ல திட்டங்கள் பிரதமர் மோடியிடம் உள்ளன

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT