உலக செய்திகள்

ஐரோப்பிய ஒன்றிய மாநாடு ஒத்திவைப்பு உக்ரைனுக்கு ரூ.4½ லட்சம் கோடி கடன் வழங்குவதில் இழுபறி

ரூ.4.58 லட்சம் கோடி (45 பில்லியன் யூரோ) கூடுதல் கடனாக வழங்க ஐரோப்பிய ஆணையம் முன்மொழிந்தது.

பிரஸ்ஸல்ஸ்,

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 2 நாள் சிறப்பு உச்சிமாநாடு நேற்றுமுன்தினம் தொடங் கியது. 12 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து எட்டப்படாததால், நேற்றைய 2-ம் நாள் அமர்வு ரத்து செய்யப்பட்டு உச்சிமாநாடு ஒரு நாள் முன்னதாகவே முடிவடைந்தது.

இந்த மாநாட்டில், உக்ரைனின் 2027-ம் ஆண்டுக்கான நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ரூ.4.58 லட்சம் கோடி (45 பில்லியன் யூரோ) கூடுதல் கடனாக வழங்க ஐரோப்பிய ஆணையம் முன்மொழிந்தது. இந்த முன்மொழிவுக்கு பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 24 நாடுகள் ஆதரவு தெரிவித்தபோதிலும், ஹங்கேரி உள்ளிட்ட 3 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

இதையடுத்து, வரும் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள அடுத்த உச்சிமாநாட்டில் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT