கீவ்,
உக்ரைனில் ரஷியா நடத்திய வான்வழிதாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர்.
உக்ரைன்- ரஷியா இடையேயான போர் 5 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இருதரப்பும் அமைதி பேச்சுவார்த்தைக்கு மறுத்து பரஸ்பரம் தாக்குதல்களை விரிவுப்படுத்தி வருகின்றன. குறிப்பாக கடந்த சிலமாதங் களாக பொது உள்கட்ட மைப்புகள், எண்ணெய் நிறு வனங்கள், துறைமுகங்கள். கிடங்குகள் உள்ளிட்ட வற்றை குறிவைத்து இருநாடுகளும் பரஸ்பரம் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.
இந்தநிலையில், உக்ரைனின் தலைநகர் கீவில் உள்ள ஒரு கிடங்கின் மீது நேற்று முன்தினம் ரஷியா வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் அந்தக்கிடங்குதீப் பற்றி எரிந்தது. அதைத்தொடர்ந்து அங்கு பயங்கர வெடிப்பு ஏற்பட் டது.
தாக்குதலுக்கு உள்ளான கிடங்கில் ஆயுதங்கள் சேகரித்துவைக்கப்பட்டிருந்தாகவும், அவை வெடித்துச் சித றியதாகவும் கூறப்படுகிறது. இதில் அந்தப் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டிடங்கள் பலத்த சேதமடைந்தன. ரஷியாவின் இந்த தாக்குதலில் 27 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 50 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, குடியிருப்பு பகுதி அருகே ஆயுதங்கள் சேகரித்து வைக் கப்பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும். அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும்' என்றார்.
உக்ரைன் பிரதமர் செர்ஹி கோரெட்ஸ்கி கூறும்போது, "அதிகாரிகளின் அலட்சியப்போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. இத்தகைய சூழ்நிலை இனி ஒரு போதும் ஏற்படாத வகையில். இதற்கு பொறுப்பான அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.