உலக செய்திகள்

ஐ.நா.சபையை தவறாக பயன்படுத்தும் பாகிஸ்தான் - இந்தியா குற்றச்சாட்டு

பாகிஸ்தானின் வெற்று பேச்சுகளுக்கு ஆதாரமற்ற கூற்றுகளும் இந்த அடிப்படை யதார்த்தத்தை மாற்றப்போவதில்லை என ஐ.நாவிற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி கூறியுள்ளார்.

நியூயார்க்,

ஐ.நா பாதுகாப்பு சபையின் ஆண்டு அறீக்கை மீதான பொது சபையின் விவாதத்தின்போது பேசிய பாகிஸ்தானின் நிரந்த பிரதிநிதி ஆசிம் இப்திகார் அகமது காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார்.

இப்பிரச்சினை பாதுகாப்பு சபையின் தீர்மானங்களின்படி தீர்க்கப்பட வேண்டும் என்று கூறினார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

இது தொடர்ப்பாக ஐ.நா.சபையில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் பேசியதாவது;-

ஐ.நா. பாதுகாப்பு சபையின் உறுப்பினராக இருப்பது ஒரு மிகப்பெரிய பொறுப்பு என்பதை பாகிஸ்தானுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இது பாரபட்சமான மற்றும் பொய்யான கருத்துகளை பரப்புவதற்கான மன்றம் அல்ல. பாகிஸ்தான் தனது அரசியல் நோக்கங்களை முன்னெடுக்க ஐ.நா தளங்களை மீண்டும் மீண்டும் தவறாக பயன்படுத்துகிறது.

இந்தியா தனது உள்நாட்டு விவகாரமாக கருதும் விஷயங்களில் தவறான கருத்துகளை பாகிஸ்தான் பரப்புகிறது.

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகவே இருந்தது. இருக்கிறது. இனியும் இருக்கும். இதற்கு முரணான எந்தவொரு கூற்றும் ஆதாரமற்றது. வரலாற்று உண்மைகளுக்கு முரணானது.

பாகிஸ்தானின் வெற்று பேச்சுகளுக்கு ஆதாரமற்ற கூற்றுகளும் இந்த அடிப்படை யதார்த்தத்தை மாற்றப்போவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.