உலக செய்திகள்

அமெரிக்காவில் கனடா நாட்டு இறக்குமதி மீதான 50 சதவீத வரிக்கு விலக்கு: 30-ந்தேதி முதல் அமல்

கனடா நாட்டு இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்டிருந்த 50 சதவீதம் வரிகளில் இருந்து சில பொருட்களுக்கு விலக்கு அளிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் அடுத்த மாதம் 3-ந்தேதி இடைத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அங்குள்ள மக்கள் கடும் விலைவாசி உயர்வால் டிரம்ப் மீது அதிருப்தியில் உள்ளதாகக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, மெய்ன் மாகாணத்தில் குடியரசுக் கட்சி செனட்டர் சூசன் காலின்ஸ் கடுமையான தேர்தல் போட்டியை எதிர்கொண்டு வருகிறார்.

கனடாவுடனான வர்த்தகப் போரினால் தங்கள் மாகாண விவசாயிகள் மற்றும் வணிகர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் டிரம்பிடம் முறையிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, சூசன் காலின்ஸுக்குத் தேர்தல் ரீதியாக உதவும் நோக்கில், கனடா நாட்டு இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்டிருந்த 50 சதவீதம் வரிகளில் இருந்து சில பொருட்களுக்கு விலக்கு அளிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதன்படி பிளைவுட் ஷீட்டுகள், பேக்கிங் பெட்டிகள் மற்றும் சில எந்திரங்களுக்கான வரிவிலக்கு வரும் 30-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனினும், டிரம்பின் இந்த அதிரடி நடவடிக்கை அவரது தோல்வி பயத்தையே காட்டுவதாக எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

SCROLL FOR NEXT