உலக செய்திகள்

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டத்தில் உள்ளது; அமெரிக்க தூதர் தகவல்

இந்தியா - அமெரிக்கா வர்த்தக உறவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 2வது முறையாக பதவியேற்றார். ஜனாதிபதியாக பதவியேற்றதுமுதல் இந்தியா, சீனா, கடனா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரி விதித்தார். குறிப்பாக, இந்திய பொருட்கள் மீது 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதையடுத்து, இந்தியா மீதான வரியை 18 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது. மேலும், இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பல மாதங்களாக, பல கட்டங்களாக இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இறுதிகட்டம்

இந்நிலையில், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டத்தில் உள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், வர்த்தக ஒப்பந்தத்தின் இறுதிகட்டத்தில் உள்ளோம். அனைத்து ஒப்பந்தங்களும் இறுதி செய்யப்பட்டு விட்டன. ஒருசில பொருட்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நீடித்து வௌகிறது. அது இறுதி 1 சதவீதம் மட்டுமே. எஞ்சிய 99 சதவீத வர்த்தக ஒப்பந்தம் உறுதியாகிவிட்டது.