இடைக்காலத் தேர்தல்
அமெரிக்காவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் இடைக்காலத் தேர்தல் எனப்படுகிறது. இந்தத் தேர்தலில் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. மாறாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதன் முடிவுகள் ஜனாதிபதியின் எஞ்சிய ஆட்சிக்காலத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் இந்த தேர்தல் உலகம் முழுவதும் உற்று நோக்கப்பட்டது.
இந்திய நேரப்படி நேற்று மாலை 5 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும், செனட்சபை யின் 35 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதுதவிர 36 மாகாணங்களுக்கான கவர்னர்களையும் தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட் சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. வாக்கு பதிவு இந்திய நேரப்படி இன்று அதிகாலை முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்ததுமே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் ஆரம்ப கட்ட தேர்தல் முடிவுகளின்படி ஜனநாயக கட்சி முன்னிலை பெற்றுள்ளது. டிரம்பின் குடியரசுக்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. இந்த நிலையில், ஜனநாயகக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றினால் நாடாளுமன்றத்தில் அதிகார சமநிலை மாறும்.குறிப்பாக, பிரதிநிதிகள் சபையை ஜனநாயகக் கட்சி கைப்பற்றினால், டிரம்ப் அர சின் திட்டங்கள், நிர்வாக நடவடிக்கைகள், அரசு செலவினங்கள் ஆகியவற்றை எதிர்க்கவும் கண்காணிக்கவும் அதிக வாய்ப்பு கிடைக்கும். செனட் சபையிலும் பெரும்பான்மை மாறினால் ஜனாதிபதியின் முக்கிய நியமனங்களுக்கு ஒப்புதல் பெறுவதிலும் சிக்கல்கள் ஏற்படலாம்.