டிரம்ப் 
உலக செய்திகள்

அமெரிக்க இடைக்கால தேர்தல்: டிரம்ப் கட்சியின் தோல்விக்கு காரணம் என்ன?

அமெரிக்காவில் விலைவாசியைக் குறைப்பதாகவும், மக்களின் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதாகவும் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது டிரம்ப் உறுதியளித்திருந்தார்.

வாஷிங்டன்,

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி அபார வெற்றி பெற்று இருக்கிறது.அதேநேரம் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. அத்துடன் நாடாளுமன்ற இரு அவைகளின் பெரும்பான்மையை ஜனநாயக கட்சியிடம் இழந்து இருக்கிறது.டிரம்பின் இந்த பின்னடைவுக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.கடந்த 2 ஆண்டுகளாக அவரது நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மீது அமெரிக்க மக்களிடம் ஏற்பட்ட அதிருப்தியே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

விலைவாசி உயர்வு

அதிலும் அமெரிக்கா சந்தித்து வரும் பொருளாதாரப் பிரச்சினைகள் முக்கிய காரணியாக அமைந்திருக்கிறது.அமெரிக்காவில் விலைவாசியைக் குறைப்பதாகவும், மக்களின் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதாகவும் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது டிரம்ப் உறுதி யளித்திருந்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த பின் அத்தியாவசியப் பொருட்களின் விலை மற்றும் அன்றாடச் செலவுகள் விண்ணை முட்ட தொடங்கின.மறுபுறம், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு டிரம்ப் கூடுதல் வரி விதித்தார். இந்த வரியால் இறக்குமதி பொருட்களின் விலை அதிகரித்து, உள்நாட்டு மக்களை வெகுவாக பாதித்தது.இதனால் டிரம்ப் அரசின் பொருளாதார நடவடிக்கைகள் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறைந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் போர்

அமெரிக்காவை தேவையற்ற போர்களில் ஈடுபடுத்த மாட்டேன் என்று கூறிவந்த டிரம்ப், ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டது அவரது முந்தைய வாக்குறுதிகள் குறித்து கேள்விகளை எழுப்பின. போர் நடவடிக்கைகளுக்கான செலவுகள், எரிபொருள் விலை உயர்வு, சர்வதேச அளவில் ஏற்பட்ட பதற்றம் ஆகியவை அமெரிக்க மக்களுக்கே பிரச்சினையை தந்தது.மேலும் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் டிரம்ப் நிர்வாகம் மேற் கொண்ட விசா கட்டுப்பாடுகள் போன்ற வெளிநாட்டினருக்கு எதிரான நடவடிக் கைகளும் தேர்தலில் எதிரொலித்தன.இந்திய வம்சாவளியினர் உள்ளிட்ட குடியேறிய சமூகத்தினர் மீது விழுந்த இந்த அடி, தேர்தலில் டிரம்புக்கு பின்னடைவை உறுதி செய்தது.

டிரம்பின் மோதல் போக்கு

கனடா, ஐரோப்பிய நாடுகள், நேட்டோ கூட்டமைப்பு ஆகியவற்றுடன் டிரம்ப் மேற் கொண்ட மோதல் போக்கும் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.அத்துடன் உக்ரைன்-ரஷியா போர் விவகாரத்தில் அவர் எடுத்த நிலைப்பாடுகள், கிரீன்லாந்து தொடர்பாக வெளியிட்ட கருத்துகள் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகியது ஆகியவை அவரது வெளியுறவுக் கொள்கை குறித்து கேள்விகளை எழுப்பின. அத்துடன் உக்ரைன்- ரஷியா போர் விவகாரத்தில் அவர் எடுத்த நிலைப்பாடுகள், கிரீன்லாந்து தொடர்பாக வெளியிட்ட கருத்துகள் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகியது ஆகியவை அவரது வெளியுறவுக் கொள்கை குறித்து கேள்விகளை எழுப்பின. இவ்வாறு பொருளாதாரம், விலைவாசி உயர்வு, வரி விதிப்புகள், விசா கட்டுப்பா டுகள் மற்றும் வெளியுறவுக் கொள்கை என பல்வேறு விவகாரங்களில் டிரம்ப் நிர்வாகம் எதிர்கொண்ட அதிருப்தி தேர்தலில் எதிரொலித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT