டெஹ்ரான்,
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே தற்காலிக போர்நிறுத்தம் நிலவி வந்தபோதிலும், சமீபத்தில் ஈரான் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களும், அதற்குப் பதிலடியாக குவைத் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களும் இந்த கடல் வழிப்பாதையை மீண்டும் பதற்றமடையச் செய்துள்ளன.
இதற்கிடையே அமெரிக்க ராணுவம் கடந்த 3 வாரங்களில் 70 வணிகக் கப்பல்களைப் பாதுகாப்பாக ஹார்முஸ் நீரிணை வழியே வழிநடத்தியுள்ளது. ஈரானின் பாதுகாப்பு ரேடார்களில் சிக்காமல் இருக்க ரகசிய வழிசெலுத்தல் என்ற தந்திரோபாய முறையை அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது.
இந்த 70 வணிகக் கப்பல்களும் தங்களின் இருப்பிடத்தைக் காட்டும் சமிக்ஞைகளை முழுமையாக அணைத்து வைக்குமாறு அமெரிக்க மத்திய கட்டளை அலுவலகம் அறிவுறுத்தியதை தொடர்ந்து ஈரானிய ரேடார்களால் இக்கப்பல்களைக் கண்காணிக்க முடியாது.