பீஜிங்,
அமெரிக்க அதிபர் டிரம்ப் 3 நாட்கள் அரசு முறைப் பயணமாக சீனா சென்றுள்ளார். விமானம் மூலம் சீனாவின் பீஜிங் விமான நிலையத்திற்கு சென்ற அதிபர் ட்ரம்ப்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சீன மற்றும் அமெரிக்க நாட்டின் கொடிகளை ஏந்தியபடி சீன நாட்டினுடைய பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் டிரம்ப்புக்கு வரவேறு அளித்தனர். 2017-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க அதிபர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
இந்த பயணத்தின்போது சீன அதிபர் ஜின்பிங் உள்பட பல்வேறு உயர்மட்ட அரசு அதிகாரிகளை அதிபர் டிரம்ப் சந்தித்து கலந்துரையாட உள்ளார். இந்த பேச்சுவார்த்தைகளின்போது அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.
இது தவிர மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்து வரும் போர் சூழல் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நிலவரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. அதோடு, வரிவிதிப்பு தொடர்பான நிலைப்பாடுகள் குறித்தும், வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.