ஈரான் மீது அமெரிக்கா தொடுத்த போருக்கு போப் ஆண்டவர் லியோ எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து போப் லியோவை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்தார்.இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ இன்று வாடிகனில் போப் ஆண்டவர் லியோவை சந்திக்க உள்ளார்.
இந்த சந்திப்பு வாடிகானின் அப்போஸ்தலிக்க அரண்மனையில் நடைபெறுகிறது. போப் லியோ மீது டிரம்ப் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை மார்கோ ரூபியோ நாளை சந்திக்க உள்ளார். ஈரானுக்கு எதிரான போருக்கு ஜார்ஜியா மெலோனி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.