வாஷிங்டன்,
வெனிசுலா, மெக்சிகோ, லத்தீன் அமெரிக்க நாடுகள், கரீபியன் நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல் மீது தாக்குதல் நடத்தவும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கடல் வழியாக படகில் போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கிழக்கு பசுபிக் கடல் வழியாக அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா நேற்று டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக கடல் பகுதியில் அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 205 ஆக அதிகரித்துள்ளது.