உலக செய்திகள்

அமெரிக்கா: வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு - கர்ப்பிணி உயிரிழப்பு

சிறுவன் உள்பட 6 பேர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் வடக்கு கலிபோர்னியாவின் பேர்பீல்டு நகரில் உள்ள ஒரு பிரபல வணிக வளாகத்தில், ஹாலோவீன் திருவிழாவுக்கான உடைகள் விற்கும் கடையில் மக்கள் கூட்டமாக இருந்தபோது மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார்.

இந்த சம்பவத்தில் 31 வயதுடைய கர்ப்பிணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், சிறுவன் உள்பட 6 பேர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பியோடிய கொலையாளியைப் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT