உலக செய்திகள்

நிலநடுக்கத்தின்போது மகளை பாதுகாத்து தன் உயிரை இழந்த கால்பந்து வீரரின் மனைவி

வெனிசுலா கால்பந்து வீரர் ஹெக்டர் பிலோ.

கராகஸ்,

நிலநடுக்கத்தின்போது மகளை பாதுகாத்த கால்பந்து வீரரின் மனைவி தன் உயிரை இழந்துள்ளார்.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை அடுத்தடுத்து 2 நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 என பதிவான இந்த நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்த நிலநடுக்கத்தில் 1,430 பேர் உயிரிழந்துள்ளனர்.

மகளை காப்பாற்றிய அண்ட்ரியா

இதனிடையே, வெனிசுலா கால்பந்து வீரர் ஹெக்டர் பிலோ. இவர் மார்டினோ டி லா குயர் கிளப் அணிக்காக விளையாடி பிரபலமானார். இவருக்கு திருமணமாகி அண்ட்ரியா என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிக்கு அலனா (வயது 1) என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில், வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஹெக்டர் பிலோ தங்கிருந்த வீடும் பாதிக்கப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது அண்ட்ரியாவும், அவரது மகள் அலனாவும் வீட்டில் இருந்துள்ளனர்.

வீடு இடிந்தபோதும் அண்ட்ரியா தனது மகள் அலனாவை காப்பற்றியுள்ளார். ஆனால், இடிபாடுகளுக்குள் சிக்கி அண்ட்ரியா உயிரிழந்தார். மகள் அலனா உயிருடன் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.