செயின்ட் பீட்டர்ஸ்பர்க்,
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணித்து, அமைதியை நிலைநாட்ட ரஷ்யா தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யும் என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் உறுதியளித்துள்ளார்.
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ரஷ்ய அதிபர் புதினை, ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அராக்சி சந்தித்தார். அப்போது அதிபர் புதின் பேசியதாவது:
"மத்திய கிழக்கில் கூடிய விரைவில் அமைதி திரும்புவதை உறுதி செய்ய ரஷ்யா தனது அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்தையும் செய்யத் தயாராக உள்ளது. ஈரானின் புதிய தலைமை மற்றும் மக்களின் தைரியத்தின் மூலம் இந்த இக்கட்டான காலத்தை அந்த நாடு கடக்கும் என்று நம்புகிறோம்" என்று கூறினார்.
கடந்த ஏப்ரல் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்ற முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தற்போது ரஷ்யாவின் தலையீடு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருமா என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் எழுந்துள்ளது.