உலக செய்திகள்

ஈரானிடம் அணு ஆயுதம் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வோம்: அமெரிக்கா

ஈரானிடம் எப்போதும் அணு ஆயுதம் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வோம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

ஈரானுடன் தற்காலிக போர் நிறுத்தத்தில் இருக்கும் அமெரிக்கா, அந்த நாட்டுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்துவதில் உறுதி யாக இருக்கிறது. இதை அமெரிக்க ராணுவ மந்திரி பெட்டே ஹெக்சேத் மீண்டும் தெரிவித்தார்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'இறுதியில் அவர்கள் (ஈரான்) பேச்சுவார்த்தைக்கு வந்து ஒரு ஒப்பந்தத்தை செய்தாக வேண்டும். ஈரானிடம் எப்போதும் அணு ஆயுதம் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வோம்' என்றார்.

மேலும் அவர், 'எங்கள் சிறந்த துணை ஜனாதிபதி மற்றும் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமையில் ஒரு ஒப்பந்தத்தின் மூலம் இதை நேர்த்தியான முறையில் செய்யவே நாங்கள் விரும்புகிறோம். முடியாவிட்டால் நாம் இதை கடினமான (போர்) வழியிலும் செய்யலாம்' என்றும் கூறினார்.

பின்னர் அவர் ஈரானுக்கு விடுத்த வேண்டுகோளில், 'உங்கள் மக்களின் நலனுக்காகவும், உலகின் நலனுக்காகவும், உங்கள் கைக்கு எட்டக்கூடிய ஒரு ஒப்பந்தத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கு மாறு நான் வேண்டுகிறேன்' என்று தெரிவித்தார்.