உலக செய்திகள்

3 இந்திய கடற்படை கப்பல்களுக்கு தாய்லாந்தில் வரவேற்பு

இந்தியாவின் வளர்ந்து வரும் திறன்களையும், தகுதிகளையும் எடுத்துக்காட்டுகிறது.

பேங்காக்,

இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படை பிரிவை சேர்ந்த அதிநவீன போர்க்கப்பல்களான ஐஎன்எஸ் உதயகிரி, ஐஎன்எஸ் கவரட்டி மற்றும் எரிபொருள் நிரப்பும் கப்பலான ஐஎன்எஸ் சக்தி ஆகியவை தங்களது தென்கிழக்கு ஆசிய பிராந்திய செயல்பாட்டு பயணத்தின் ஒரு பகுதியாக, இன்று தாய்லாந்தின் துறைமுகத்தை சென்றடைந்தன.

வரவேற்பு

கிழக்கு கடற்படையின் ரியர் அட்மிரல் அலோக் ஆனந்தா தலைமையில் சென்ற இந்த கப்பல்களை தாய்லாந்து கடற்படை வரவேற்றது. இந்த துறைமுக பயணமானது, தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் தொடர்ச்சியான கடல்சார் ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும். மேலும் இது, இந்தியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான நெருக்கமான, நீண்டகால கடல்சார் ஒத்துழைப்பை பிரதிபலிக்கிறது.

கூட்டு நடவடிக்கை

இந்த துறைமுக பயணமானது, இந்தியாவுக்கும் தாய்லாந்துக்கும் வீரர்களும் பரஸ்பரம் தொழில்முறை பரிமாற்றங்கள், கப்பல் செயல்பாட்டு திட்டமிடல், விளையாட்டு போட்டிகள் மற்றும் சமூக தொடர்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட உள்ளனர். இத்தகைய கூட்டு நடவடிக்கைகள் இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைந்த செயல்பாட்டையும், பரஸ்பர புரிந்துணர்வையும் மேலும் வலுப்படுத்தும்.

இந்திய கடற்படை கப்பல்களின் உள்நாட்டு வடிவமைப்பு, கட்டுமானம், அதிநவீன தொழில்நுட்பம் ஆகியவற்றை வெளிக்காட்டி, பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் திறன்களையும், தகுதிகளையும் எடுத்துக்காட்டுகிறது.