இந்த புதிய வசதியின் மூலம், பயனர்கள் குறுஞ்செய்திகள், இணையதள இணைப்புகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்ப வேண்டிய தேதி, நேரத்தை முன்கூட்டியே தேர்வு செய்யலாம்.
வாட்ஸ் அப் பயனர்கள் குறுஞ்செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை முன்கூட்டியே திட்டமிட்டு அனுப்பும் புதிய வசதியை அறிமுகப்படுத்துவதற்கான சோதனையில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
தற்போது, வாட்ஸ் அப்பில் குறிப்பிட்ட நேரத்தில் செய்திகளைத் தானாக அனுப்புவதற்கான வசதி சில ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு பீட்டா வெர்ஷனாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த வசதி விரைவில் மற்ற பயனர்களுக்கும் விரிவுபடுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய வசதியின் மூலம், பயனர்கள் குறுஞ்செய்திகள், இணையதள இணைப்புகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்ப வேண்டிய தேதி, நேரத்தை முன்கூட்டியே தேர்வு செய்யலாம். குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 2 வாரங்கள் வரை முன்கூட்டியே செய்திகளைத் திட்டமிட முடியும் எனக் கூறப்படுகிறது.குறிப்பிட்ட நேரம் வந்ததும், பயனர்கள் மீண்டும் நேரடியாக அனுப்ப வேண்டிய அவசியமின்றி செய்திகள் தானாகவே அனுப்பப்படும். செல்போன் இணைய இணைப்பில் இல்லாவிட்டாலும் செய்திகள் அனுப்பப்படும் வகையில் இந்த வசதி உருவாக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனிப்பட்ட உரையாடல்கள் மட்டுமின்றி, வாட்ஸ் அப் குழு உரையாடல்களிலும் இந்த வசதி செயல்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அனுப்புவதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள செய்திகளைப் பார்ப்பதற்கும், தேவைப்பட்டால் அவற்றை நீக்குவதற்கும் ஆப்ஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பிறந்தநாள் வாழ்த்துகள், முக்கியமான விஷயங்கள் பற்றிய நினைவூட்டல்கள், மற்றும் அலுவலகச் செய்திகள் போன்றவற்றைச் சரியான நேரத்தில் அனுப்ப இந்த வசதி உதவியாக இருக்கும்.தற்போது குறிப்பிட்ட சில பயனர்களிடம் மட்டுமே இந்த வசதி சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து பயனர்களுக்கும் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை