உலக செய்திகள்

சிம் கார்டு இல்லாவிட்டால் இயங்காது...வேலையை ஆரம்பித்த வாட்ஸ் அப்

மொபைல்​போனில் ஆக்​டிவ் சிம் கார்டு இருந்​தால் மட்​டுமே வாட்ஸ் அப் உள்​ளிட்ட செயலிகளை பயன்​படுத்த முடி​யும்.

புதுடெல்லி,

இந்​தி​யா​வில் வாட்ஸ் அப், பேஸ்​புக், இன்​ஸ்​டாகி​ராம், டெலிகி​ராம், சிக்​னல், அரட்​டை, ஜியோ சேட், ஸ்னாப்​சேட், சேர் சாட் உள்​ளிட்ட பல சமூக வலை​தளங்​கள் பயன்​பாட்​டில் உள்​ளன. இதில் அதிகம் பேர் பயன்படுத்தும் செயலி எதுவென்றால் கண்ணை மூடிக்கொண்டு வாட்ஸ் அப் என சொல்லிவிடலாம். வாட்ஸ் அப் என்பது அத்தியாவசிய தகவல் தொடர்பு செயலியாகவும் மாறிவிட்டது. வாட்ஸ் அப் செயலியை மொபைல்​போனில் பதி​விறக்​கம் செய்​யும் ​போது சிம் கார்டு அவசியம். இதன்​பிறகு சிம் கார்டை அகற்​றி​னாலோ அல்​லது சிம் கார்டு செயலிழந்​து​விட்​டாலோ கூட செயலிகள் தொடர்ந்து பயன்​பாட்​டில் இருக்​கும்.

இதனால் சில முறைகேடுகளும் நடக்கின்றன. இதற்கு கடிவாளம் போட மத்திய அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக எடுத்தது. இதன்படி, மொபைல்​போனில் ஆக்​டிவ் சிம் கார்டு இருந்​தால் மட்​டுமே வாட்ஸ் அப் உள்​ளிட்ட செயலிகளை பயன்​படுத்த முடி​யும். சிம் கார்டு இல்​லை​யென்​றால் சமூகவலைதள செயலிகள் தானாகவே செயலிழந்​து ​விடும் என்று மத்​திய தொலைத்​தொடர்​புத் துறை புதிய விதி​களை அறிவித்தது. இந்த விதிகளில் மாற்றம் செய்ய மத்திய அரசு மறுத்துவிட்ட நிலையில், சிம் அடிப்படையிலான சரிபார்ப்பை (SIM-based verification) செய்வதற்கான பணிகளை வாட்ஸ் அப் தொடங்கியுள்ளது. வாபீட்டாஇன்போ வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆண்ட்ராய்டு 2.26.8.6 பீட்டா வெர்ஷனில் இதற்கான சோதனை ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் விரைவில் ஆக்டிவ் சிம் கார்டு இல்லாவிட்டால் வாட்ஸ் அப் செயல்படாத நிலை ஏற்படும்.