உலக செய்திகள்

வழக்கறிஞர், பணி அனுபவ சர்ச்சை... வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜக்காரியா பதவியேற்ற ஐந்தே நாட்களில் நீக்கம்

அவரிடம், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் உங்களை அழைக்கிறார் என்றார்.

வாஷிங்டன் டி.சி.

அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளராக பதவியேற்ற ஐந்தே நாட்களில், ஜக்காரியா அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

அமெரிக்க வெள்ளை மாளிகையின் புதிய செய்தி தொடர்பாளராக கேத்தி ஜக்காரியா நியமிக்கப்பட்டார். எனினும், கடந்த 9-ந்தேதி அப்பதவிக்கு அவர் நியமிக்கப்பட்ட நிலையில், ஐந்தே நாட்களில் பதவியில் இருந்து நீக்கமும் செய்யப்பட்டு உள்ளார்.

வழக்கறிஞர் பணி அனுபவம்

இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அவர் தன்னுடைய முதல் செய்தியாளர் சந்திப்பில் சரியாக பதிலளிக்க முடியாமல் திணறினார். இதனால் விமர்சனத்துக்கு உள்ளானார். அவரது கல்வித்தகுதி, பணி அனுபவம் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. அவர் தன்னை ஒரு வழக்கறிஞர் என்றே பல நாட்களாக கூறி வருகிறார்.

ஆனால், அமெரிக்காவிலோ அல்லது சில ஆண்டுகளுக்கு முன் அவர் பணியாற்றிய சீனாவிலோ, வழக்கறிஞர் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றதற்கான விவரங்களை பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

துணை ஜனாதிபதி அழைப்பு

ஆனால், வழக்கறிஞர் தேர்வில் அவர் தேர்ச்சி பெறவில்லை என வால்ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற செய்தி நிறுவனம் பின்னர் தெரிவித்தது. இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்கிய அவர், புதிய செய்தி தொடர்பாளர் பணிக்கான தன்னுடைய திட்டங்கள் பற்றி வால்ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி நிறுவனத்திற்கு இன்று பேட்டி அளித்து கொண்டிருந்தபோது, டிரம்ப்பின் மூத்த ஆலோசகர் ஜேசன் மில்லர் கதவை தட்டினார்.

அவரிடம், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் உங்களை அழைக்கிறார் என்றார். அதன்பின்னர் சில நிமிடங்களில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

SCROLL FOR NEXT