உலக செய்திகள்

குழந்தைகள் காப்பகத்தில் 13 வயது சிறுவனுடன் உல்லாசம் அனுபவித்த பெண்ணுக்கு சிறை

காப்பகத்துக்கு வெளியில் சிறுவனை அழைத்துச் சென்று பெண் உல்லாசமாக இருந்துள்ளார்.

லண்டன்,

இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் தனியார் குழந்தை காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தின் உதவி மேலாளர் லிண்டி லியா (வயது 44). இவர் அங்குள்ள 13 வயது சிறுவனுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதனையடுத்து போதைப்பொருள் கொடுத்து சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அதன்பிறகு காப்பகத்துக்கு வெளியிலும் சிறுவனை அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இதுகுறித்து சக ஊழியர்கள் அளித்த புகாரின்பேரில் போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அவரது செல்போனைக் கைப்பற்றி ஆய்வு செய்தபோது அதில் சிறுவனுடன் உல்லாசமாக இருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து அவரை கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். லிவர்பூல் கிரவுன் கோர்ட்டு அந்த பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து அந்த பெண் சிறையில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT