உலக செய்திகள்

விபத்தில் சிக்கிய மல்யுத்த பிரபலம் - பதறவைக்கும் வீடியோ

உலகப் புகழ்பெற்ற மல்யுத்த நிகழ்ச்சியான டபிள்யூ.டபிள்யூ.இ நிர்வாகத்தின் முன்னாள் சிஇஓ வின்ஸ் மெக்மொகன்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் டபிள்யூ.டபிள்யூ.இ முன்னாள் முதன்மை செயல் அதிகாரியும் (CEO), பிரபல ரெஸ்லருமான வின்ஸ் மெக்மோகன் கார் விபத்தில் சிக்கினார்.

உலகப் புகழ்பெற்ற மல்யுத்த நிகழ்ச்சியான டபிள்யூ.டபிள்யூ.இ நிர்வாகத்தின் சிஇஓவாக இருந்தவர் வின்ஸ் மெக்மொகன். தற்போது அதன் முழுப் பொறுப்பையும் அவரது மருமகன் டிரிபிள் எச் பார்த்து வருகிறார். தற்போது ஓய்வில் இருந்து வரும் அவர், அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

அவர் சுமார் 160 கி.மீ வேகத்தில் காரை ஓட்டி முன்னாள் சென்ற கார் மீது மோதிய வீடியோ காட்சியை போலீசார் வெளியிட்டுள்ளனர். விபத்தில் சிக்கியபோதும் அவர் சாதாரணமாக இறங்கி வெளியேறிய காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. தனது பேத்தியின் பிறந்தநாள் விழாவுக்கு செல்வதற்காக அதிவேகமாக கார் ஓட்டிதாக வின்ஸ் மெக்மோகன் தெரிவித்துள்ளாார்.