கோப்புப்படம் 
உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை 46.34 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39.63 கோடியாக உயர்ந்துள்ளது.

ஜெனிவா,

சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், உலகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,34,75,516 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 39,63,68,084 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 6,10,27,251 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பால் இதுவரை உலகம் முழுவதும் 60,80,181 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு- 8,12,89,602, உயிரிழப்பு - 9,94,739, குணமடைந்தோர் - 5,66,31,117

இந்தியா - பாதிப்பு - 4,30,01,084, உயிரிழப்பு - 5,16,162, குணமடைந்தோர் - 4,24,50,055

பிரேசில் - பாதிப்பு - 2,94,78,039, உயிரிழப்பு - 6,56,003, குணமடைந்தோர் - 2,80,63,760

பிரான்ஸ் - பாதிப்பு - 2,37,58,447, உயிரிழப்பு - 1,40,613, குணமடைந்தோர் - 2,23,94,531

இங்கிலாந்து- பாதிப்பு - 1,99,11,155 , உயிரிழப்பு - 1,63,248, குணமடைந்தோர் - 1,84,73,970

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

ஜெர்மனி - 1,78,43,545

ரஷ்யா - 1,74,49,438

துருக்கி - 1,46,23,028

இத்தாலி - 1,35,63,466

ஸ்பெயின் - 1,12,60,040

அர்ஜெண்டீனா - 89,85,836

தென்கொரியா - 76,29,275

நெதர்லாந்து - 73,27,235

ஈரான் - 71,33,139

வியட்நாம் - 68,20,458