கோப்புப்படம் 
உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8.16 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5.77 கோடியாக உயர்ந்துள்ளது.

ஜெனீவா,

உலகம் முழுவதும் தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இந்த சூழலில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் 8 ஐரோப்பிய நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 8,16,69,521 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 5,77,95,786 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 17 லட்சத்து 81 ஆயிரத்து 442 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,20,92,293 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,05,790 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு- 1,97,81,624, உயிரிழப்பு - 3,43,182, குணமடைந்தோர் -1,16,96,727

இந்தியா - பாதிப்பு- 1,02,24,797, உயிரிழப்பு - 1,48,190, குணமடைந்தோர் - 98,06,767

பிரேசில் - பாதிப்பு - 75,06,890, உயிரிழப்பு - 1,91,641, குணமடைந்தோர் - 65,68,898

ரஷ்யா - பாதிப்பு - 30,78,035, உயிரிழப்பு - 55,265, குணமடைந்தோர் - 24,71,309

பிரான்ஸ் - பாதிப்பு - 25,62,646, உயிரிழப்பு - 63,109, குணமடைந்தோர் - 1,90,722

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

இங்கிலாந்து - 23,29,730

துருக்கி - 21,62,775

இத்தாலி - 20,56,277

ஸ்பெயின் -18,94,072

ஜெர்மனி - 16,70,194

கொலம்பியா - 16,03,807

அர்ஜென்டினா - 15,90,513

மெக்சிகோ -13,89,430

போலந்து - 12,61,010

ஈரான்- 12,06,373

உக்ரைன் - 10,30,374

தென்னாப்பிரிக்கா - 10,11,871

SCROLL FOR NEXT