கோப்புப்படம் 
உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.85 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17.92 கோடியை தாண்டியது.

ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19.85 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 19,85,02,106 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 17,92,57,320 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 42 லட்சத்து 32 ஆயிரத்து 290 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,50,12,496 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 89,994 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு- 3,57,43,778, உயிரிழப்பு - 6,29,314, குணமடைந்தோர் - 2,96,66,117

இந்தியா - பாதிப்பு - 3,16,54,584, உயிரிழப்பு - 4,24,384, குணமடைந்தோர் - 3,08,12,873

பிரேசில் - பாதிப்பு - 1,99,17,855, உயிரிழப்பு - 5,56,437, குணமடைந்தோர் - 1,86,19,542

ரஷ்யா - பாதிப்பு - 62,65,873, உயிரிழப்பு - 1,58,563, குணமடைந்தோர் - 56,08,619

பிரான்ஸ் - பாதிப்பு - 61,27,019, உயிரிழப்பு - 1,11,867, குணமடைந்தோர் - 57,00,815

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

இங்கிலாந்து - 58,56,528

துருக்கி - 57,27,045

அர்ஜெண்டினா- 49,29,764

கொலம்பியா - 47,85,320

ஸ்பெயின் - 44,47,044

இத்தாலி - 43,50,028

ஈரான் - 38,71,008

ஜெர்மனி - 37,76,721

இந்தோனேசியா- 34,09,658

போலந்து - 28,82,939

SCROLL FOR NEXT