உலக செய்திகள்

உலக அளவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.38 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.38 கோடியாக உயர்ந்துள்ளது.

ஜெனிவா,

சீனாவில் ஹூபேய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

உலக அளவில் கொரோனா பாதிப்பின் உச்சமாக அமெரிக்காவில் 59 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளனர். 1 லட்சத்து 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2,38,00,724 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து இதுவரை 1 கோடியே 63 லட்சத்து 47 ஆயிரத்து 844 பேர் குணமடைந்துள்ளனர். கவலை அளிக்கும் விதமாக கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 லட்சத்து 16 ஆயிரத்து 534 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 66 லட்சத்து 36 ஆயிரத்து 346 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 767 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு - 59,14,699 உயிரிழப்பு - 1,81,097

பிரேசில் - பாதிப்பு - 36,27,217, உயிரிழப்பு - 1,15,451

இந்தியா - பாதிப்பு - 31,64,881, உயிரிழப்பு - 58,546

ரஷியா - பாதிப்பு - 9,61,493, உயிரிழப்பு - 16,448

தென் ஆப்பிரிக்கா - பாதிப்பு - 6,11,450, உயிரிழப்பு - 13,159