கோப்புப் படம் AFP 
உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 43.18 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49.61 கோடியாக அதிகரித்துள்ளது.

வாஷிங்டன்,

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், உலகம் முழுவதும் நேற்று ஒரு நாளில் 10 லட்சத்து 93 ஆயிரத்து 799 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 138 ஆக அதிகரித்துள்ளது.

11 லட்சத்து 24 ஆயிரத்து 113 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 43 கோடியே 18 லட்சத்து 51 ஆயிரத்து 996 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் நேற்று ஒரு நாளில் 3 ஆயிரத்து 456 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 61 லட்சத்து 94 ஆயிரத்து 809 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக அமெரிக்காவில் ஒரே நாளில் 32 ஆயிரத்து 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மேலும் ஒரே நாளில் 403 பேர் உயிரிழந்துள்ளனர்.