உலக செய்திகள்

ஏமன்: ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பாதுகாப்புப்படையினர் வான்வழி தாக்குதல்

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது

சனா,

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பாதுகாப்புப்படையினருக்கும் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஏமன் உள்நாட்டுப்போர்

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன.

ஏமனின் சில பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதம் உள்பட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் ஏமனில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

அதேவேளை, அமெரிக்கா, ஈரான் மோதலின்போது ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது சவுதியும் தாக்குதல் நடத்தியது.

ஹவுதி மீது பாதுகாப்புப்படையினர் தாக்குதல்

இந்நிலையில், ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் பாதுகாப்புப்படையினருக்கும் இடையே கடந்த சில வாரங்களாக மோதல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது ஏமன் பாதுகாப்புப்படையினர் இன்று வான்வழி தாக்குதல் நடத்தினர்.

வடக்கு ஹுடைடா, அல் பராஹ், மரிபா, அல் லப்நட், அல் ஆலம், அல் ஜவ் ஆகிய பகுதிகளில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆயுத கட்டமைப்புகள் மீது பாதுகாப்புப்படையினர் போர் விமானங்கள், டிரோன்கள் மூலம் வான்வழி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எத்தனைபேர் கொல்லப்பட்டனர்? என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.

SCROLL FOR NEXT