Image Credits: AI 
உலக செய்திகள்

இனி கட்டணம் இல்லாமலே இந்த வசதியை பயன்படுத்தலாம்: யூடியூப் அறிவிப்பால் பயனர்கள் மகிழ்ச்சி

இந்த வசதியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்கள் இலவசமாக பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலிகளில் ஒன்றாக இருப்பது யூடியூப்தான். பிடித்த வீடியோக்கள், பாடல்கள் என சிறந்த பொழுதுபோகு தளமாக யூடியூப் உள்ளது. பலருக்கும் டிவி பார்க்கும் பழக்கமே குறைந்து போனதற்கு யூடியூப் தளம் ஒரு காரணம் என்றால் மிகையல்ல. அந்த அளவுக்கு ஸ்மார்ட் போன் பயனர்களிடம் பெரும் ஆதிக்கம் செலுத்தும் யூடியூப் அவ்வப்போது புதிய அப்டேட்களையும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், இனி Picture-in-Picture வசதியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்கள் இலவசமாக பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இசை அல்லாத நீண்ட வீடியோக்களுக்கு மட்டுமே பயனர்கள் /இந்த வசதியை (PiP) இலவசமாக பயன்படுத்த முடியும். இதற்கு முன்பு பிரீமியம் கட்டணம் செலுத்தும் பயனர்களுக்கு இந்த வசதி இருந்தது .