உலக செய்திகள்

உன் கணவர் வயசானவர்... இளம் பெண் கைதியை தனியறையில் நிர்வாணப்படுத்தி... அமெரிக்க காவல் அதிகாரியின் அட்டூழியம்

அவர் அதனை மறைத்தபோதும், பெண்ணின் தோழி வழியே என்ன நடந்தது? என கணவர் அறிந்து, வேதனையும் ஆத்திரமும் கொண்டார்.

நியூயார்க்

உன் கணவர் வயசானவர் என கூறி, தனியறையில் இளம் பெண் கைதியை நிர்வாணப்படுத்தி, அமெரிக்க காவல் அதிகாரி பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.

அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசில், சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மெக்சிகோ, கனடா உள்ளிட்ட வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைபவர்களை கைது செய்து, அவர்களை நாடு கடத்தும் வேலைகளும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், அண்டை நாடான கனடாவின் மான்ட்ரியல் நகரில் இருந்து அமெரிக்காவுக்குள் ரியோ கிராண்ட் வேலி பகுதியருகே சட்டவிரோத வகையில் நுழைந்து விட்டார் என கூறி, ரஹப் அலி அல்மெர்ஹிஜ் (வயது 21) என்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

தனி அறையில் விசாரணை

லெபனானை சேர்ந்தவரான ரஹப் அலியை குடியுரிமை மற்றும் சுங்க இலாகா அதிகாரியான மார்கெல் வால்லஸ் என்பவர் விசாரணைக்காக ராய்மண்ட்வில்லே பகுதியில் உள்ள எல் வால்லே காவல் தடுப்பு முகாமுக்கு அழைத்து சென்றார். பின்னர், அவரிடம் விசாரிக்க வேண்டியுள்ளது என கூறி, தனியாக அறை ஒன்றிற்குள் கொண்டு சென்று கதவை பூட்டி விட்டார்.

அவரிடம் விசாரணை நடத்தியபோது, தகாத இடங்களில் தொட்டு, வால்லஸ் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார். இளம்பெண்ணிடம் அவர், உன்னுடைய கணவர் வயசானவர். அவரால் உனக்கு எந்த பலனும் கிடையாது. அவரால் எதுவும் செய்ய முடியாது. என் ஒருவனால் மட்டுமே உனக்கு உதவ முடியும்.

கிரீன் கார்டு

அமெரிக்காவில் வசிக்க ஏதுவாக, நான் உனக்கு கிரீன் கார்டு வாங்கி கொடுக்கிறேன் என கூறியுள்ளார். அப்போது, அவரிடம் வால்லஸ் தகாத வகையில் நடந்து கொண்டார்.

இந்த துயர சம்பவம் பற்றி அந்த பெண் கூறும்போது, ஒரு மேஜை மட்டும் இருந்த சிறிய அறைக்குள் வால்லஸ் மற்றும் அந்த பெண் இருந்துள்ளனர். அப்போது, அந்த அதிகாரி, இளம்பெண்ணின் கால் சட்டைக்குள் (பேண்ட்), விரலை நுழைத்துள்ளார். பேண்ட் மற்றும் உள்ளாடையை அவிழ்த்து விட்டு, அவரை அரை நிர்வாண நிலையில் நிற்க வைத்துள்ளார். இதன்பின்னர், வால்லஸ் அவருடைய பேண்ட்டையும் அவிழ்க்க தொடங்கினார் என அந்த பெண் கூறினார்.

மெக்சிகோ

இது எதற்கும் அந்த பெண் ஒப்புதல் தரவில்லை. அதற்கு உடன்பட மறுத்த அவர், அதனை நிறுத்தும்படி கூறி அழுதுள்ளார். ஒரு கைதியாக, அந்த பெண் இருக்கிறார். இந்த வழக்கில் செல்வாக்கு செலுத்துபவராக, பெண்ணை விடுவிக்க கூடிய இடத்தில் இருப்பவராக வால்லஸ் இருக்கிறார். அதனால், அவருடன் செல்ல மறுத்து விட்டு, அந்த அறையில் இருந்து வெளியேற முடியாது என அந்த பெண் அறிந்திருந்துள்ளார்.

இதன்பின்னர் அந்த பெண் கூறும்போது, அவருடைய வாழ்க்கையே அழிந்து விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது என கூறினார். வால்லஸ், பெண்ணிடம் தொலைபேசி எண்ணையும் கொடுத்து, மனம் மாறினால் மெக்சிகோவுக்கு வரலாம் என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்கா மறுப்பு

ஆகஸ்டு கடைசியில் நடந்த இந்த சம்பவம் பற்றி கணவர் சாம் வைசிடம், பல மாதங்களாக அவர் எதுவும் கூறவில்லை. முதலில் அவர் அதனை மறைத்தபோதும், பெண்ணின் தோழி வழியே என்ன நடந்தது? என கணவர் அறிந்து, வேதனையும் ஆத்திரமும் கொண்டார். இந்த தவறுக்கு அந்த பெண் காரணமில்லை என்றும் அவரை காப்பாற்ற முடியாததற்காக வருத்தமும் அடைந்துள்ளார்.

ஆனால், இந்த கேவலம் அந்த அதிகாரியையே சாரும் என்றும் ரஹப் அலியை ஒருபோதும் கைவிடமாட்டேன் என்றும் அவருடைய துணிச்சலை கண்டு பெருமையடைகிறேன் என்றும் வைஸ் கூறினார்.

எனினும், இந்த குற்றச்சாட்டுகளை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை மறுத்துள்ளது. எல் வால்லே காவல் தடுப்பு முகாமில் நடந்தவை என கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என அந்த துறையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

SCROLL FOR NEXT