Image Credits: AI 
உலக செய்திகள்

ஏஐ வீடியோக்களை அடையாளம் காண யூடியூப்பின் புதிய அப்டேட்

யூடியூப்யில் இருப்பது உண்மையான வீடியோவா அல்லது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதா என்ற குழப்பம் பயனர்களிடையே ஏற்பட்டு வருகிறது.

பிரபல வீடியோ தளமாக யூடியூப் உள்ளது. கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப்பைப் பயன்படுத்தாத இணையவாசிகளே இல்லை எனச் சொல்லலாம். பாடல்கள், படங்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என ஒரு வீடியோ களஞ்சியமாக உள்ள யூடியூப்பை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். யூடியூப்பில் உள்ளடக்க உருவாக்குநர்களுக்கு கணிசமான தொகையை வருவாயாக வழங்குகிறது. இதனால் பலரும் யூடியூப்பில் வீடியோக்களை பதிவேற்றி வருமானம் ஈட்டுகின்றனர்.

தற்போது ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்களும் அதிகரித்து வருகின்றன. உண்மையான வீடியோவா அல்லது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதா என்ற குழப்பம் பயனர்களிடையே ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஏஐ வீடியோக்களை எளிதில் அடையாளம் காண புதிய வசதிகளை யூடியூப் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏஐ பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தத்ரூபமான (ரியலிஸ்டிக்) வீடியோக்கள் மற்றும் இயல்பான வீடியோக்களுடன் இணைக்கப்பட்ட செயற்கைக் காட்சிகள் இடம்பெறும் போது, இனி "ஏஐ காட்சிகள்" என்ற அடையாளக் குறிப்பு (லேபிள்) காட்டப்படும்.

யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்களிலும் இந்த ஏஐ லேபிள் இனி தோன்றும். இதன் மூலம் ஒரு வீடியோ உண்மையானதா அல்லது ஏஐ உதவியுடன் உருவாக்கப்பட்டதா என்பதை பார்வையாளர்கள் எளிதில் அறிந்து கொள்ள முடியும்.

SCROLL FOR NEXT