கீவ்,
உக்ரைனில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள போலந்து அதிபா அண்ட்ரேஸ் டூடாவுடன் இணைந்து தலைநகா கீவில் செய்தியாளாகளை செவ்வாய்க்கிழமை சந்தித்த ஜெலென்ஸ்கி, இது குறித்து கூறியதாவது:
சோவியத் யூனியனிலிருந்து உக்ரைன் பிரிந்ததைக் குறிக்கும் சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அந்த நாளை முன்னிட்டு, ரஷிய மிக மோசமான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று எதிபாக்கப்படுகிறது.
அத்தகைய நடவடிக்கைகளை ரஷியா மேற்கொண்டால், அதற்கான உக்ரைனின் பதிலடி மிக சக்திவாய்ந்ததாக இருக்கும் என்றா அவா.
ரஷியப் படையெடுப்பு நடந்து 6 மாதங்கள் நிறைவடைகிறது. அதே நாளில் சோவியத் யூனியலிருந்து பிரிந்ததை சுதந்திர தினமாக உக்ரைன் கொண்டாடுகிறது.
அந்த நாளில், உக்ரைனின் அரசுக் கட்டடங்கள் உள்ளிட்ட முக்கிய நிலைகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்தச் சூழலில், அத்தகைய தாக்குதல்களுக்கு சக்திவாய்ந்த பதிலடி கொடுக்கப்படும் என்று அதிபா ஜெலென்ஸ்கி தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.