உலக செய்திகள்

ஜிம்பாப்வே: ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து - பலி எண்ணிக்கை 72ஆக உயர்வு

ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு ஜிம்பாப்வே.

ஹராரே,

ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு ஜிம்பாப்வே. இந்நாட்டில் படகு போக்குவரத்து அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

படகு விபத்து

இதனிடையே, அந்நாட்டின் கரிபா ஏரியில் கடந்த செவ்வாய்கிழமை படகு சென்றுகொண்டிருந்தது. அந்த படகில் 153 பேர் பயணித்தனர். ஏரியின் மையப்பகுதியில் சென்றபோது படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பலி எண்ணிக்கை உயர்வு

இந்த விபத்தில் ஏற்கனவே 44 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் 77 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் எஞ்சிய 4 பேரின் நிலை என்ன? என்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.