ரியாத்,
சவுதி அரேபியாவின் மரண தண்டனையில் இருந்து தப்பிய இலங்கை வாலிபர் தப்பி உள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த 27 வயது வாலிபர் அனோஜன் சிவ ராசா. இவர் பிழைப்புத் தேடி சவுதி அரேபியாவுக்கு சென்று அங்கு புலம்பெயர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த ஜூன் மாதம் சமூக வலைத்தளத்தில் நடந்த மத ரீதியி லான விவாதத்தின்போது. முகமது நபி குறித்து அனோஜன் வலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவிட்டதா கக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இஸ்லாமிய மதத்தையும், முகமது நபியையும் அவமதித்ததாகக் கூறி கடந்த ஜூலை மாதம் சவுதி அரேபியா அதிகாரிகள் அனோஜனைக் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சவுதி கோர்ட்டும். கடந்த செப்டம்பர் மாதம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பு இலங்கையில் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவரை விடுவிக்கக் கோரி சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், இலங்கை அரசும் தீவிர முயற்சியில் ஈடுபட் டன. இந்நிலையில், அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நேற்று சவுதி அரேபிய சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டது. இந்தத் தகவலை இலங்கை வெளியு றவுத்துறை இணை மந்திரி அருண் ஹேமச்சந்திரா உறுதிப்படுத்தியுள்ளார்.