உலக செய்திகள்

லண்டன் பயணம் நிறைவு: சென்னை புறப்பட்டார் முதல்-அமைச்சர் விஜய்

முதல்-அமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் மூலம் ரூ.15,300 கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

லண்டன்,

தமிழக முதல்-அமைச்சர் விஜய் லண்டன் பயணத்தை நிறைவு செய்து சென்னை புறப்பட்டார்.

லண்டன் பயணம்

தமிழகத்தின் பொருளாதாரத்தை 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்துவதற்கான இலக்கை முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். அதன் ஒரு பங்காக, தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்துக்கு முதல்-அமைச்சர் விஜய் பயணம் மேற்கொண்டார்.

அங்கு தமிழகத்​தில் உற்​பத்தி ஆலைகள், உலகளா​விய திறன் மையங்​கள் மற்​றும் ஆய்வு மேம்​பாட்டு வசதி​களை நிறு​வுவதற்​காக, தமிழக அரசின் வழி​காட்டி நிறு​வனத்​துக்​கும், பல்​வேறு பன்​னாட்டு நிறு​வனங்​களுக்​கும் இடையே கடந்த 14-ம் தேதி ஒப்​பந்​தங்​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன.

தொழில் முதலீடுகள்

இதுத​விர அசோக் லேலண்ட் நிர்​வாகத் தலை​வர் தீரஜ் இந்​துஜா, பினோலெக்ஸ் இண்​டஸ்ட்​ரீஸ் நிர்​வாகத் தலை​வர் பிர​காஷ் பி.​சாப்ரி உள்​ளிட்​டோரும் முதல்​-அமைச்சர் விஜய்யை சந்​தித்​தனர். அப்போது கடந்த ஆகஸ்ட் மாதம் நடை​பெற்ற ‘வெற்​றி’ முதலீட்​டாளர்​கள் மாநாட்​டில் செய்​யப்​பட்ட ரூ.2,500 கோடி முதலீட்​டின் முன்​னேற்​றம் குறித்து அவர்​கள் விளக்​கினர். மேலும், தமிழகத்​தில் காற்​றாலை உள்​ளிட்ட புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்​தித் துறை​யில் முதலீடு​களை அதி​கரிப்​பது குறித்​தும், இந்த சந்​திப்​பில் ஆலோ​சிக்​கப்​பட்​டது.

தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய் பேசுகையில், இந்த முதலீடு​கள் தமிழக இளைஞர்​களின் லட்சியங்​களை பிர​திபலிப்பதாகவும் பிரிட்​டன்​-இந்தியா பொருளா​தார மற்​றும் வர்த்தக ஒப்​பந்​தம் வாயி​லாக உரு​வாகும் வாய்ப்​பு​களைப் பயன்​படுத்​தி, தமிழகத்​தில் முதலீடு செய்ய இங்​கிலாந்து மற்றும் ஐரோப்​பிய நிறு​வனங்​களுக்கு அழைப்பு விடுத்​தார்.

சென்னை புறப்பட்டார்

இந்த நிலையில், லண்​டன் பயணத்தை முடித்​துக் கொண்டு முதல்​-அமைச்சர் விஜய் இன்று(வியாழக்கிழமை) சென்னை புறப்பட்டார். முதல்-அமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் மூலம் ரூ.15,300 கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. விமானம் மூலம் லண்டனில் இருந்து புறப்பட்ட முதல்-அமைச்சர் விஜய், நாளை காலை 8 மணிக்கு சென்னை வந்தடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT