உலக செய்திகள்

ஹார்முஸ் ஜலசந்தி: பாதுகாப்பாக கடந்த 7-வது இந்திய எல்.பி.ஜி கப்பல் கிரீன் சான்வி

இந்தியாவின் எல்.பி.ஜி தேவையில் சுமார் 60% இறக்குமதி செய்யப்படுகிறது.

புதுடெல்லி,

மேற்காசிய மோதலால் ஈரானை ஒட்டிய ஹார்மூஸ் ஜலசந்தியை கப்பல்கள் கடப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து தாக்கியதற்கு பதிலடியாக ஈரானும் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. மீறி செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் சூழல் காணப்படுகிறது.

இந்தியாவில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ப் பதற்றத்திற்கிடையில், இந்திய கொடியுடன் கூடிய 7-வது எல்.பி.ஜி கப்பல் கிரீன் சான்வி பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தி கடந்தது.

மேலும் இந்த பகுதி கடந்த இந்தியாவின் 9-வது கப்பல் இதுவாகும். மேலும் இந்த கப்பலில் 44 ஆயிரம் டன் எல்.பி,ஜி உள்ளது. இந்தியாவின் 17 கப்பல் இன்னும் சிக்கி உள்ளது, மேலும் பிரான்ஸ், ஜப்பான் கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தி கடந்துள்ளது.

தற்போது நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே, ஹார்முஸ் ஜலசந்தியை பயன்படுத்திய முதல் மேற்கத்திய நாட்டு கப்பல் என்ற பெருமையை பிரான்ஸை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் கொள்கலன் கப்பல் பெற்றுள்ளது.