தலையங்கம்

த.வெ.க.வில் இருந்து விலகுகிறேனா? - நாஞ்சில் சம்பத் விளக்கம்

என்னைக் களங்கப்படுத்த முயற்சி வெற்றி பெறாது என நாஞ்சில் பஞ்சம் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

த.வெ.க கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கும் நாஞ்சில் சம்பத், த.வெ.க. கட்சியிலிருந்து விலகியதாக நேற்று வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இதற்கு நாஞ்சில் சம்பத் எக்ஸ் வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்து கூறியிருப்பதாவது:-

”அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை நான் குறைத்து பேசியதாக சிலக் குறைப்பிரசவங்கள் செய்தி வெளியிடுவதை யாரும் நம்ப வேண்டாம். த.வெ.க. என்கிற அமைப்பில் பரப்புரைச் செயலாளராக கடமையாற்றுகிற நான், கண்ணை மூடுகிறவரை, கல்லறைக்குப் போகிற வரை இந்தக் கடமையை செய்வதற்கு என்னை அர்ப்பணிக்கிறேன். என்னைக் களங்கப்படுத்துகிற முயற்சி வெற்றி பெறாது.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT