புதுச்சேரி

விஷம் வைத்து நாய் குட்டிகள் சாகடிப்பு

வில்லியனூர் அருகே உள்ள கோனேரிக்குப்பம் நாய் குட்டிகளுக்கு விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளது குறித்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வில்லியனூர்

வில்லியனூர் அருகே உள்ள கோனேரிக்குப்பம் அண்ணா நகரை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 45). இவர் வீட்டில் நாய்கள் வளர்த்து வருகிறார். நேற்று காலை நாய் குட்டிகளை வீட்டில் இருந்து வெளியே அவிழ்ந்து விட்டார். சிறிது நேரம் கழித்து 2 நாய் குட்டிகள் வாயில் நுரை தள்ளியபடி வீட்டின் வாசலில் இறந்து கிடந்ததை கண்டு ரத்தினம் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் வீட்டின் சுற்றுப்புறத்தில் சென்று பார்த்தபோது, மர்மநபர்கள் சாப்பாட்டில் விஷம் கலந்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனை தின்றதால்தான் நாய் குட்டிகள் இறந்துபோனதாக தெரிகிறது. இது குறித்த புகாரின்பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT