Results 2026

தேர்தல் முடிவுகள்: விஜய் அலை என்று சொல்வதா, திமுக வெறுப்பு அலை என்று சொல்வதா? - தமிழிசை பேட்டி

தோல்வியடைந்த வேட்பாளர்கள் மக்களுக்காக பணியாற்ற வேண்டுமென தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், விஜய்யின் தவெக 110 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் கூறி இருப்பதாவது;

”அரசியலில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்.. தோற்கலாம். தேர்தல் முடிவுகளை விஜய் அலை என்று சொல்வதா? அல்லது திமுக வெறுப்பு அலை என்று சொல்வதா என தெரிந்துகொள்ள வேண்டும்.

தேசிய ஜனநாயக கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். தோல்வியடைந்த வேட்பாளர்கள் மக்களுக்காக பணியாற்ற வேண்டும். எங்கள் அரசியல் இன்னும் தீவிரமாக தொடரும்.”

இவ்வாறு அவர் கூறினார்.