தலைப்புச் செய்திகள்

சென்னை: பள்ளி வேன் சாலையில் கவிழ்ந்து விபத்து

சென்னை ,

சென்னை மதுரவாயல் பைப்பாஸ் சாலையில் இன்று காலை தனியார் பள்ளி வேன் சென்றுகொண்டிருந்தது. அந்த வேனில் 2 மாணவர்கள் பயணித்தனர்.

இந்நிலையில், பைப்பாஸ் சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாணவர்கள் 2 பேர், டிரைவர் காயமின்றி உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.