புதுச்சேரி

சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

பிள்ளையார்குப்பத்தில் சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

பாகூர்

புதுச்சேரியின் முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக புதுச்சேரி-கடலூர் ரோடு இருந்து வருகிறது. கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி பல மாதங்களாக நடந்து வருகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாததால் சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்