புதுச்சேரி
தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக புதுச்சேரி நகர கிளை மேலாளர் ஜவகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் (இ.எஸ்.ஐ.சி.) தனது இருவார விழாவினை முன்னிட்டு நீடராஜப்பையர் வீதியில் உள்ள நகர கிளை அலுவலகத்தில் விழிப்புணர்வு முகாமை நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் வருகிற 7-ந்தேதியில் காலை 10.30 மணிமுதல் 11.30 மணி வரையிலும், சிறப்பு குறைதீர்வு முகாம் (சிறப்பு சுவிதா சமாகம்) வருகிற 1 மற்றும் 9-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
மேற்கண்ட முகாம்களில் கலந்துகொண்டு பயனடைய விரும்புவோர் நகர கிளை அலுவலகத்துக்கு நேரில் வந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.