சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டசபை தொகுதியில் போட்டியிட இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் மற்றும் மனைவி கயல்விழியின் பெயரில் அசையும் சொத்து, அசையா சொத்து என்ன என்ன உள்ளது அதன் மதிப்பு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
கையிருப்பு
* சீமானிடம் ரூ.50 ஆயிரம் கையிருப்பில் உள்ளது.
* மனைவி பெயரில் ரூ.35 ஆயிரம் கையிருப்பு உள்ளது.
* சீமானின் அசையும் சொத்து மதிப்பு ரூ.39 லட்சம்
* மனைவியிடம் இருக்கும் நகை உள்ளிட்ட சொத்துக்களின் மதிப்பு ரூ.2.57 கோடி உள்ளது.
வருமான வரி
* சீமான் கடந்த 2020-2021 நிதியாண்டில் ரூ.5.12 வருமான வரி செலுத்தி உள்ளார்.
2021 -2022-ல் ரூ.4.9 லட்சம்
2022 -2023 -ல் ரூ.4.9 லட்சம்
2023 -2024-ல் ரூ.31 லட்சம்
* 2024 -2025-ல் ரூ.6.6 லட்சம் வரி செலுத்தி உள்ளார்.
சீமான் மீது அரசுக்கு எதிராக பேசுதல், சட்ட விரோத கூட்டம் என 24 வழக்குகள் உள்ளன.
வாகனங்கள்
* சீமானிடம் 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹுண்டாய் வெனா மாடல் கார் உள்ளது. மனைவியிடம் டொயோட்டா இன்னோவா, ஹுண்டாய் சீடா கார் உள்ளது.
தங்கம்
* சீமானிடம் ரூ.19.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 150 கிராம் தங்கம் உள்ளது. சீமான் மனைவியிடம் ரூ.2.08 கோடி மதிப்பிலான 1.6 கிலோ தங்கம் உள்ளது.
அசையா சொத்து
* சீமான் பெயரில் அசையா சொத்து இல்லை. சொந்தமாக வீடு கூட இல்லை.
* எஸ்பிஐ வங்கியில் சீமானுக்கு ரூ.5 லட்சம், அவரது மனைவிக்கு ரூ.18 லட்சம் கடன்
கல்வித்தகுதி
*சீமான் இளையான்குடி ஜாகிர் உசைன் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.