மத்திய பட்ஜெட் - 2023

பட்ஜெட் தாக்கலை பார்க்க வந்த நிதி மந்திரியின் குடும்பம்

நாடாளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றுவதை நேரில் பார்ப்பதற்காக அவரது குடும்பத்தினர் வந்திருந்தனர்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 5-வது முறையாக நேற்று முழுமையான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார். இது காகிதமில்லா பட்ஜெட் ஆகும்.

அவர் பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றுவதை நேரில் பார்த்து மகிழ்வதற்காக அவரது மகள் வாங்மயி பரகலா மற்றும் குடும்ப உறவினர்கள் வந்திருந்தனர்.

நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலுக்காக கருப்பு மற்றும் தங்க நிற பார்டர் கொண்ட சிவப்பு நிற புடவை அணிந்து வந்திருந்தார்.

மத்திய பட்ஜெட் கையடக்க மடிக்கணினி வாயிலாக தாக்கல் செய்யப்பட்டதால் அதை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வழக்கம்போல சிவப்பு நிற பையில் எடுத்து வந்தார்.

ரெயில்வே மந்திரி அஷ்விணி வைஷ்ணவ் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பலரும் மக்களவைக்கு வந்திருந்து பட்ஜெட் உரையின்போது குறிப்புகள் எடுத்தனர்.

பட்ஜெட்டையொட்டி நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர்கள் மாடம் நிரம்பி வழிந்தது.

தைப்பூசம்: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து

தமிழகம் உள்பட 4 மாநிலங்களில் அரிய வகை காந்தங்களுக்கான வழித்தட ஒப்புதல்: இந்திய தொழில் கூட்டமைப்பு வரவேற்பு

மத்திய பட்ஜெட்: எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி கடும் விமர்சனம்

அனைவருக்குமான வளர்ச்சி என்ற குறிக்கோளுடன் பட்ஜெட் - மத்திய நிதி மந்திரி உரை

மத்திய பட்ஜெட் 2026 - 27 : ஒரு ரூபாயில் வரவு செலவு எவ்வளவு?