புதுடெல்லி,
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி (ரைபிள், பிஸ்டல், ஷாட்கன்) டெல்லியில் உள்ள கர்னிசிங் துப்பாக்கி சுடுதல் தளத்தில் அடுத்த ஆண்டு (2027) ஏப்ரல் 21-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது.
2028-ம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்சில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றான இந்த உலக கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டிக்கான 12 ஒதுக்கீடு (கோட்டா) இடங்களை பெற முடியும்.
இந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் (ரைபிள், பிஸ்டல்) போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்திய ரைபிள் சங்கத்துக்கு, ஆசிய துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் அளித்துள்ளது. இந்த போட்டியும் லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றாகும். இந்த போட்டியில் நிர்ணயிக்கப்படும் இலக்கினை எட்டிப்பிடிப்பவர்கள் ஒலிம்பிக் போட்டிக்கான 8 இடங்களை (கோட்டாவை) கைப்பற்றலாம். இந்தியாவில் நடைபெறும் இந்த இரு போட்டியின் மூலம் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான 20 இடங்களை வசப்படுத்தலாம்.