கிரிக்கெட்

முதல் டி20 - ஜிம்பாப்வேவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

இவ்விரு பெண்கள் அணிகள் இரு நாட்டு தொடரில் மோதுவது இதுவே முதல் முறையாகும்.

ராய்ப்பூர்,

முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

இந்தியா- ஜிம்பாப்வே

ஜிம்பாப்வே பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் 3 ஆடுகிறது.

இவ்விரு பெண்கள் அணிகள் இரு நாட்டு தொடரில் மோதுவது இதுவே முதல் முறையாகும். இந்த மைதானத்தில் பெண்கள் சர்வதேச போட்டி நடப்பதும் முதல் தடவையாகும்.

இதற்கிடையில், இந்தியா- ஜிம்பாப்வே இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.

டாஸ்

இந்நிலையில், இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் ஆட உள்ளது.

ஸ்மிருதி மந்தனா

இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் சமீபத்தில் விலகியநிலையில், புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.

மந்தனா முழு நேர கேப்டனாக பொறுப்பை ஏற்ற பிறகு விளையாடப்போகும் முதல் தொடர் என்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT