சிட்னி,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி, முதல் டி20 போட்டியில் 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் குவித்துள்ளது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியிக்கு தொடக்க வீராங்கனை ஜார்ஜியா பிளிம்மர் சிறப்பாக விளையாடி 68 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார்.
மற்றொரு தொடக்க வீராங்கனையான ப்ளோரா டெவன்ஷயர் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் அமெலியா கெர் 12 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து மிடில் ஆர்டரில் களமிறங்கிய மேடி கிரீன் அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் எடுத்தார்.
ஜார்ஜியா பிளிம்மர் மற்றும் மேடி கிரீன் ஆகியோரின் இந்த சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய மகளிர் அணி விளையாடி வருகிறது.