சிட்னி,
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி திரில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியிக்கு தொடக்க வீராங்கனை ஜார்ஜியா பிளிம்மர் சிறப்பாக விளையாடி 68 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார். மிடில் ஆர்டரில் களமிறங்கிய மேடி கிரீன் அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் எடுத்தார்.
ஜார்ஜியா பிளிம்மர் மற்றும் மேடி கிரீன் ஆகியோரின் இந்த சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய மகளிர் அணி களமிறங்கியது.
இதில் பெத் மூனி 25 பந்துகளில் 38 ரன்களும், எலிஸ் பெர்ரி 30 பந்துகளில் 52 ரன்களும் விளாசினர். ஆஷ்லே கார்ட்னர் 17 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து வந்த வீராங்கனைகளும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கினர்.
இறுதியில், ஆஸ்திரேலிய மகளிர் அணி 18.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து, 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.