கிரிக்கெட்

முதல் டி20 - இந்தியாவுக்கு 115 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ராய்ப்பூர்,

இந்தியாவுக்கு எதிரான முதலாவது மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில், ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் முறையாக இருதரப்பு தொடர்

ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளும் மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் இருதரப்புத் தொடரில் மோதுவது இதுவே முதல் முறையாகும்.

கேப்டனாக ஸ்மிருதி மந்தனா

இந்திய மகளிர் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகியதைத் தொடர்ந்து, புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முழுநேர கேப்டனாகப் பொறுப்பேற்ற பிறகு விளையாடும் முதல் தொடர் என்பதால் இந்தத் தொடர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

114 ரன்கள் எடுத்த ஜிம்பாப்வே

இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று இரவு 7 மணிக்குத் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் ஷார்னே மேயர்ஸ் 33 பந்துகளில் 43 ரன்களும், கெலிஸ் ந்த்லோவு 44 பந்துகளில் 42 ரன்களும் எடுத்தனர். மோடெஸ்டர் முப்பாசிக்வா 16 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து, 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களமிறங்க உள்ளது.

SCROLL FOR NEXT