சென்னை,
2026 கால்பந்து உலகக் கோப்பையை ஸ்பெயின் அணி வென்றுள்ளநிலையில், அடுத்து சிஎஸ்கே-வும் இந்தியாவும்தான் கோப்பைகளை வெல்லும் என்ற மீம்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விளையாட்டு உலகில் புள்ளிவிவரங்கள், சென்டிமென்ட்கள் ரசிகர்களின் கவனத்தை எப்போதும் ஈர்க்கும். அந்த வகையில், 2026 பிபா உலகக் கோப்பையில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து, 2010-2011-ல் நடந்த நிகழ்வுகள் மீண்டும் 2026-2027-ல் அரங்கேறுமா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2010-ம் ஆண்டு ஸ்பெயின் அணி தனது முதல் பிபா உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது. அதற்கு அடுத்த ஆண்டான 2011-ல், மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதே ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
தற்போது 2026 பிபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் மீண்டும் உலக சாம்பியனானது. இதன்மூலம், 2010-ல் ஸ்பெயின் உலகக் கோப்பையை வென்றதைப் போலவே, 2026-லும் ஸ்பெயின் சாம்பியனானதால், "2011-ல் இந்தியா ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது போல, 2027-ல் மீண்டும் உலகக் கோப்பையை வெல்லுமா? , அதேபோல் 2011 ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், 2027-லும் கோப்பையை கைப்பற்றுமா?" என்ற மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.